

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக, சசிகலா புதிதாக தொடங்கிய அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாசின் தேர்தல் சுற்றுப் பயண அட்டவணை வெளியாகி உள்ளது. நாளை சேலத்தில் (12-ந்தேதி) ராமதாஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதிகளின் விவரம் வருமாறு:-
12-ந்தேதி - சேலம்
13-ந்தேதி - தருமபுரி
16-ந்தேதி - கும்பகோணம்
17-ந்தேதி - காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம்
18-ந்தேதி - விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி
19-ந்தேதி - செய்யாறு, போளூர், கலசப்பாக்கம்
20-ந்தேதி - விக்கிரவாண்டி, செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர்