தொகுதி பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த மார்ச் 2-ஆம் தேதி விசிகவுக்கு திமுக அழைப்பு

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வரும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
தொகுதி பங்கீடு:  பேச்சுவார்த்தை நடத்த மார்ச் 2-ஆம் தேதி விசிகவுக்கு திமுக அழைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க.வும் இணைந்துள்ளன.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் நடத்தி வரும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தி.மு.க. தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு. துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்த கட்சிகளுடன் எத்தனை தொகுதிகள் என்று இன்னும் எட்டப்படாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த மார்ச் 2 ஆம் தேதி திமுக அழைப்பு விடுத்துள்ளது.

திமுகவிடமிருந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com