தொகுதி பங்கீடு: மதிமுக, மநீம, மமக உடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்து உள்ளது.
தொகுதி பங்கீடு: மதிமுக, மநீம, மமக உடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தற்போது புதிதாக தே.மு.தி.க.வும் இணைந்து உள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த முறை 3 தொகுதிகள் கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த முறை 5 தொகுதிகளை கேட்டு, குறைந்தபட்சம் 4 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க., தன்னுடைய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சியுடன் இன்று (திங்கட்கிழமை) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது கமல்ஹாசனின் விருப்பம் ஆகும். அவருடைய விருப்பம் நிறைவேறுமா? தி.மு.க.வின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடும் சூழல் உருவாகுமா? என்பது பேச்சுவார்த்தை முடிவில் தெரிந்து விடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com