

சென்னை,
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளில் பெரும்பாலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. விடு தலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வருகிறது.
ஆனால், தி.மு.க. தரப்பில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால், தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.
இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை யில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தேர்தல் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரித் தல், வேட்பாளர்களை தேர்வு செய்தல், தி.மு.க.விடம் வெற்றி வாய்ப் புள்ள தொகுதிகளை கேட்டுப்பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தி.மு.க. கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் 2028-ல் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், திமுக - விசிக இடையே இன்று 2-ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.