நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்; திமுக வென்றால் சந்தோசம் எனக் கூறியதால் நடவடிக்கையா?

தி.மு.க. பெண் வேட்பாளர்களை மக்கள் ஆதரித்தால் சந்தோஷம் தான் என்று ஜான்சிராணி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது
 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திடீர் மாற்றம்;  திமுக வென்றால் சந்தோசம் எனக் கூறியதால் நடவடிக்கையா?
Published on

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகு திக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாள ராக ஏற்கனவே அக்கட்சியின் மாநில மகளிர் பாசறையின் துணைச் செயலாளர் ஜான்சிராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

மேலும் ஜான்சிராணி கடந்த 30-ந்தேதி தனது வேட்பு மனுவை கட்சியினருடன் வந்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அனி தாவிடம் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி மாற்றம் செய்யப்பட்டு, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் சுகன்யா(வயது 37) என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து சுகன்யா தனது வேட்பு மனுவை நேற்று மாலை 3 மணிக்கு முன்னதாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் தாக்கல் செய்தார். பின்னர் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்

தி.மு.க. பெண் வேட்பாளர்களை மக்கள் ஆதரித்தால் சந்தோஷம் தான் என்று ஜான்சிராணி கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜான்சிராணி மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு புதிய வேட்பாளராக சுகன்யா அறிவிக்கப்பட்ட தாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com