மீண்டும் காங்கிரஸ் ‘கை’ வசம் சென்ற ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கைவசப்படுத்தி உள்ளது.
மீண்டும் காங்கிரஸ் ‘கை’ வசம் சென்ற ஈரோடு கிழக்கு தொகுதி
Published on

ஈரோடு,

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர், உடல்நலக்குறைவால் 2023-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி அன்று உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டு எம்.எல்.ஏ.வாக இருந்த அவரும் உடல்நலக்குறைவால் 2024 டிசம்பர் 14-ந்தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசிடம் இருந்து இந்த தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கைவசப்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com