விசுவாசத்திற்கு விஜய் தந்த பரிசு : கண்கலங்கிய விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளர்

கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் போட்டியிடுகிறார்.
விசுவாசத்திற்கு விஜய் தந்த பரிசு : கண்கலங்கிய விருகம்பாக்கம் தொகுதி தவெக வேட்பாளர்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில் கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன், வில்லிவாக்கத்தில் ஆதவ் ஆர்ஜுனா, தி.நகரில் புஸ்சி ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர். ராஜேந்திரன் மீதான அன்பை வெளிக்காட்டும் விதமாக அவரின் மகன் சபரிநாதனுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார். மேடைக்கு தந்தையுடன் சென்று விஜய்யை சந்தித்த போது வேட்பாளர் சபரிநாதன் கண்கலங்கினார். இதுகாண்போரை நெகிழ செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com