“ஆட்சி பங்கு எங்கள் உரிமை..” - அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு காங்கிரஸ் எம்.பி., பதிலடி

அதிகார பகிர்வு அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
“ஆட்சி பங்கு எங்கள் உரிமை..” - அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு காங்கிரஸ் எம்.பி., பதிலடி
Published on

சென்னை,

மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை மாநகர் திமுக சார்பில் 'தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டம் நேற்று (பிப். 13) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “முதல்-அமைச்சர் தாய்மார்களை நம்பிதான் தேர்தலில் போட்டியிடுகிறார், இப்போது பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் காரணம். நீங்கள் கொடுக்கும் பணம்தான் உங்களுக்கே திருப்பி வருகிறது.

ஆட்சியில் பங்கு இல்லை என முதல்-அமைச்சரே சொல்லிட்டார். அதனால் கூட்டணி ஆட்சியை பற்றி பேச தேவையில்லை. நாம் ஒரு சப்போர்ட்காகதான் கூட்டணியை பற்றி பேசினோம், இப்போது அது தேவையில்லை. பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் கிரிமினல்கள், வருமானவரித்துறையில் இருந்து பேசுகிறேன் என சொல்லி ஏமாற்றி காசு வாங்குகிறார்கள்.

நமது கூட்டணி தலைவர்கள் சாதாரமாணவர்கள் அல்ல. வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சாதரணமானவர்கள் அல்ல. கூட்டணியை முதல்-அமைச்சர் அவமதிக்கமாட்டார், உதயசூரியனாலே எல்லோரும் ஓட்டு போடுவார்கள்.

பாஜககாரன் வந்து காங்கிரஸ் வந்து எதாவது குடைச்சல் கொடுக்கமாட்டார்களா என நினைக்கிறார்கள். கூட்டணி கட்சி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். கூட்டணி வேண்டாம் என சொல்வதற்கு எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதை தலைவர்தான் முடிவு செய்வார். 96 இடங்களை வென்றபோது, எல்லா கட்சிகளும் இருந்தார்கள். ஆனால் கருணாநிதி கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையே.

இந்த தேர்தலில் 170 தொகுதிகளில் போட்டியிடுவோம், 150 முதல் 160 தொகுதியில் உதயசூரியன் நிச்சயம் வெற்றிபெறும். உதயசூரியன் சின்னம் என்றால் அது ஒரு மாதிரி. இப்போது எங்காவது சாதி சண்டை நடக்கிறதா...? எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது” என்று பேசி இருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சுக்கு பதிலடி தரும் வலையில் காங்கிரஸ் எம்.பி.. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

2021-ல் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் (தி.மு.க.) தோல்வி அடைந்த இடங்களை தான்.

அதிகார பகிர்வு அவசியம்.. ஆட்சி பங்கு எங்கள் உரிமை.. மக்கள் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com