தவெகவினர் வெளியிட்டது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் - டிடிவி தினகரன் பேட்டி

திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோ வெளியிட்டுள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தவெகவினர் வெளியிட்டது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் - டிடிவி தினகரன் பேட்டி
Published on

சென்னை,

சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என கவர்னரிடம் நேற்று புகார் அளித்து இருந்தேன். அத்துடன், தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்றும் கவர்னரிடம் தெரிவித்தேன். ஆனால் காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அசல் கடிதம் எங்கே? காரில் அமரந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோவை எடுத்தது யார்? திமிரிலும், வன்மத்துடனும் தவெகவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். எனது கட்சி எம்.எல்.ஏ. ஆதரவு அளித்திருந்தால் அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்செல்லாதது ஏன்.?

எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி, எங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தவெகவினர் முயல்கின்றனர். தவெகவினர் என்னை மிரட்டவும், பயமுறுத்தவும் பார்க்கின்றனர். விஜய் 108 சீட் வென்றிருந்தால் எனக்கு என்ன.? விஜய் எனக்கு என்ன மாமனா? மச்சானா? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? விஜய் பெரிய ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன? காமராஜ் கையெழுத்திட்டதாக கூறி தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். முதல்-அமைச்சர் ஆவதற்காக விஜய் மோசடி செய்கிறார். மக்களுகு தவெக விளக்கம் அளிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com