திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநாட்டு மேடைக்கு வருவதற்காக அரை கிலோமீட்டர் தொலைவுக்கு 'ரேம்ப்' பாதை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

திருச்சி,

திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மாநாட்டில் திமுக நிர்வாகிகள் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்கிறது. மாநாட்டு திடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணியளவில் வருகிறார். 110 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அவர் மாநாட்டு மேடைக்கு வருவதற்காக அரை கிலோமீட்டர் தொலைவுக்கு 'ரேம்ப்' பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர், தி.மு.க.வினர் வரவேற்பை ஏற்றபடி மேடைக்கு நடந்து வர உள்ளார்.

இந்த மாநாட்டுக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார். அதன்பின்னர் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் உரை நிகழ்த்துகின்றனர். பல்வேறு தீர்மானங்களும் நிறை வேற்றப்பட உள்ளன.இறுதியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு ரையாற்றி பேச உள்ளார். முடிவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி கூறுகிறார்.

மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகிகளுக்காக மதிய உணவு முழு வீச்சில் தயாராகி வருகிறது. மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு அசைவத்தில் கமகமக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகிய உணவுகள் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி திமுக மாநாடு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com