த.வெ.க. தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை- நடிகர் சரத்குமார் பேட்டி

நடிகர் சரத்குமார் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது த.வெ.க. கட்சி மக்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.
த.வெ.க. தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை- நடிகர் சரத்குமார் பேட்டி
Published on

ஆவடி,

ஆவடி தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சரத்குமார் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியபோது, 'தமிழகத்துக்கு வடக்கில் இருந்து எந்த ஆபத்தும் இல்லை. அமைச்சர் நாசருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். த.வெ.க. தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

கரூரில் நடந்த துயர சம்பவத்தில் நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல், வீட்டுக்கு அழைத்து அவர்களிடம் துக்கம் விசாரிக்கும் தலைவர் உலகில் யாரேனும் இருக்கிறார்களா?. நான் நடித்த 'ஜக்குபாய்' திரைப்படம் இணையத்தில் வெளியானது. அதற்கு காரணம் அன்றைய தி.மு.க. அரசு என்று நான் சொல்லவில்லை. உங்களுடன் இருப்பவர்களே சதி செய்து படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஒருவேளை படம் நன்றாக இல்லை என்று நீங்களே இணையத்தில் கசியவிட்டு, மக்கள் படத்தை பார்க்கட்டும் என விட்டீர்களா என்பது யாருக்கு தெரியும்' என பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com