

தஞ்சை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் விஜய்யின் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு, சேலம், வேலூரில் விஜய்யின் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக தஞ்சையில் நடத்த தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 4-ஆம் தேதி விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் தஞ்சை போலீசாரிடம் மனு அளித்துள்ளனர்.
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள செங்கிப்பட்டியில் இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விவகாரங்களிலும் விஜய் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தஞ்சையில் நடைபெற உள்ள நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.