தவெகவுக்கு எதிரி திமுகதான்; செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தவெகவுக்கு எதிரி திமுகதான்; செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
Published on

ஈரோடு,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஈரோட்டில் இன்று தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது,

தவெகவை பொறுத்தவரை எங்களுக்கு திமுகதான் எதிரி. தேசிய ஜனநாயக கூட்டணியில் 10 கட்சிகளில் ஒன்று அதிமுக.

அதிமுக ஒரு கட்சியே அல்ல. தவெக சார்பில் போட்டியிட நேற்று ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். விருப்பமனுவை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூர் பகுதியில் நிறையபேர் குடியிருக்கிறார்கள். குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் விருப்ப மனுவை பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com