கோடை காலத்தில் தடையற்ற குடிநீர் - கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் வாக்குறுதி

கன்னியாகுமரி தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளுக்காக சட்டமன்றத்தில் பல முறை குரல் கொடுத்துள்ளதாக தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
கோடை காலத்தில் தடையற்ற குடிநீர் - கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் வாக்குறுதி
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் இன்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வழிபாடு நடத்திய பிறகு தளவாய் சுந்தரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளுக்காக சட்டமன்றத்தில் பல முறை தான் குரல் கொடுத்துள்ளதாகவும், 5 கிராமங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com