வேலூர்: விஜய் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு 20 நிபந்தனைகள்

கியூஆர் கோடு பாஸ் வைத்திருக்கும் 4,900 த.வெ.க. நிர்வாகிகளுக்கு மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்: விஜய் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு 20 நிபந்தனைகள்
Published on

வேலூர்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந் திப்பு கூட்டம் வேலூர் அருகே அகரம்சேரியில் நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கிறது. முதலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடத்த திட்டமி டப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் 33 ஏக் கர் நிலத்தை சமன் செய்யும் பணி பல நாட்களாக நடந்து வந்தது.

இந்த நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றப்பட்டதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ள னர் என்றும், கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும், அவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக் கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு போலீஸ் தரப்பில் சுமார் 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் உட்காருவதற்கு நாற்காலிகள் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவவசதி போன்ற முக்கியமான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகலில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மேற்கூரை அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கூரை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் நடைபெறும் பகுதியில் 30 டாக்டர்கள், 100 நர்சுகள், 100 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய 10 மருத்துவக்குழுக்களும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி விஜய் முகத்தை பிரதிபலிக்கும் முகமூடி அணிந்து அவரை வரவேற்க கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி மக்கள் அதிகமானவர்கள் வரக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com