திமுகவை ஆட்சியில் அமர்த்தவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார்: நயினார் நாகேந்திரன் தாக்கு

திமுகவை ஓட்ட வேண்டும் என்பதற்காக அரசியல் செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வர கூடாது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
திமுகவை ஆட்சியில் அமர்த்தவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார்: நயினார் நாகேந்திரன்  தாக்கு
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் நேற்று காரைக்குடியில் ரோடு ஷோ சென்றதை கூறினார்கள். அப்போது அவர் சைக்கிள் ஓட்டி வந்தார். கை காட்டிக் கொண்டும், ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் வந்தார் என்று சொன்னார்கள். எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எல்லாரும் ஜெயலலிதா ஆகிவிட முடியாது.

அதற்காக தனி கொள்கைகள் வேண்டும், தனி அமைப்புகள் வேண்டும் இயற்கையான உணர்வுகள் வேண்டும். ஏதோ திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்காக விஜய் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார். ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தனியாக வந்திருக்கிறார்.

நேற்று காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியதையும் சொன்னார்கள். வேடிக்கையாக இருந்தது. சைக்கிள் ஓட்டுவதற்காகவா அரசியலுக்கு வந்திருக்கிறோம்.. திமுகவை ஓட்ட வேண்டும் என்பதற்காக அரசியல் செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வர கூடாது. இதெல்லாம் ஒரு கேலிக்கூத்தான விஷயம்” என்றார்

X

Daily Thanthi
www.dailythanthi.com