

தவெக நிர்வாகி அருண்ராஜ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது:
விஜய் வெறும் ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களின் பேராதரவுடன்தான் களத்திற்கு வந்துள்ளார். ஊழல் சக்திகளுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பதைதான் மக்கள் விரும்புகிறார்கள்.
வரும் தேர்தலில் தவெக-வின் பலம் என்ன என்பதை மக்கள் உலகுக்கு உணர்த்துவார்கள் . ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் கொள்கை முடிவு. ஊழல் சக்தியுடன் கூட்டணி அமைக்காமல் இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.