எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஜெயலலிதா வரிசையில் விஜய் உள்ளார்: ராமதாஸ் அத்வாலே

எம்.ஜி.ஆர், என்.டி. ராமராவ் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தமிழ்நாட்டில் விஜய் மிகவும் பிரபலமாக திகழ்கிறார் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஜெயலலிதா வரிசையில்  விஜய் உள்ளார்: ராமதாஸ் அத்வாலே
Published on

கோவை,

இந்திய குடியரசு கட்சி தலைவரும்(ஆர்.பி.ஐ.-ஏ) மத்திய சமூகநலத்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-எம்.ஜி.ஆர், என்.டி. ராமராவ் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தமிழ்நாட்டில் விஜய் மிகவும் பிரபலமாக திகழ்கிறார்.

தற்போது அவரோடு பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவேளை விஜய் இடங்களைக் கைப்பற்றினால், ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டால் அவரை நாடுவோம்.விஜய் அதிக வாக்குகளைப் பெறுவார் என்பதால் அவர் தி.மு.க.வுக்குப் பெரிய சவாலாக இருப்பார். எங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும் கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com