விஜய் தனித்துதான் போட்டியிடுவார்: திருமாவளவன்

பாஜகவை விஜய் எங்கும் விமர்சிக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
மதுரை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பாஜகவின் பிடிக்குள் அதிமுக சென்று விட்டது. அதிமுகவை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தலைமையில்தான் இயங்குகிறது என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைமையை கூட தெளிவாகக் கூற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். விஜய் எங்கும் பாஜகவை நேரடியாக விமர்சிக்கவில்லை. பாஜக கொள்கை எதிரி என்று மட்டுமே குறிப்பிடுகிறார். தனித்து அல்லது ஒரு கூட்டணி அமைத்து விஜய் போட்டியிடுவார்,” என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






