200 அல்ல அதைவிட கூடுதலாக வெற்றி பெறுவோம் - அமைச்சர் முத்துசாமி

அரசின் திட்டமாக இருந்தாலும் கட்சியின் சார்பாக எடுக்கிற நடவடிக்கையாக இருந்தாலும் எல்லோரும் பாராட்டும் வகையிலும், எதிர்கட்சிகளை மிகப்பெரிய அளவில் மதித்து நடக்கும் ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
200 அல்ல அதைவிட கூடுதலாக வெற்றி பெறுவோம் - அமைச்சர் முத்துசாமி
Published on

சென்னை,

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அமைச்சர் முத்துசாமி அண்ணா அறிவாலயம் வந்தார்.

விருப்ப மனு அளித்த பின் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:-

திமுக தலைவர் முகஸ்டாலின் தலைமையிலான கட்சி மற்றும் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது. நாம் ஆட்சி நடத்துவதை போலவே மற்ற மாநிலங்களும் நடத்த வேண்டும் என்று எண்ணுகிறது. எனவே அரசின் திட்டமாக இருந்தாலும் கட்சியின் சார்பாக எடுக்கிற நடவடிக்கையாக இருந்தாலும் எல்லோரும் பாராட்டும் வகையிலும், எதிர்கட்சிகளை மிகப்பெரிய அளவில் மதித்து நடக்கும் ஒரு தலைவராக இருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தார்கள் அதே போலவே கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் விருப்ப மனு வழங்கிய நாளிலிருந்து இன்று வரை விருப்ப மனு வாங்க கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. முதல்வர் ஒவ்வொன்றிலும் பொறுமையாக செயல்பட்டு வருகிறார்.பெண்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறார்.இதெல்லாம் திமுக கூட்டணிக்கு பெரிய வெற்றியை கொடுக்கும்

இன்று முதல் - அமைச்சர் பிறந்தநாளுக்கு எங்கள் அனைவரையும் அழைத்து சொல்கிறார். எனது பிறந்த நாளை நீங்கள் கொண்டாட விரும்பினால் எந்த ஒரு ஆடம்பரம், ஆர்பாட்டம் ஏதும் செய்யாமல் யாருக்காவது நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் அது எனக்கு நிம்மதியை தரும் என்றார்.

திமுகவை பொறுத்தவரை அணிகள், துணை அமைப்புகள் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதில் இளைஞரணி மிகப்பெரிய அளவில் செயல்படுகிறது. துணை முதல்வராக இருந்தாலும் இளைஞரணி செயலாளர் என்பதை தான் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய அளவில் விரும்புகிறார். மகளிரணி சார்பில் வாக்கு கேட்க போக சொன்னார்கள் இன்று வீடு வீடாக வாக்கு சேகரிக்க மகளிரணி செல்கிறது. அதில் யாரும் ஈடு கட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரிய பணியை செய்து வருகிறது. இதுவெல்லாம் தலைவர் அவர்கள் இந்த ஐந்தாண்டு காலமாக செய்த சாதனைகளால் ஏற்பட்டிருக்கிற வெளிப்பாடாகும். எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும். 200 தொகுதிகள் அல்ல 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com