தமிழகத்தில் கடந்த 10 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு?

இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த 10 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு?
Published on

தமிழக சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது எஸ்.ஐ.ஆருக்கு பிறகு தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆருக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் வாக்கு சதவீதம் வரலாறு காணாத உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. 5 மணி வரையிலான நிலவரத்திலேயே இது உறுதியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் கடந்த 2011 ஆம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 78.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வாக்கு சதவிகிதத்தை இந்த ஆண்டு 5 மணி நிலவரத்திலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு;

  • 1980 – 65.4%

  • 1984 – 73.5%

  • 1989 – 69.2%

  • 1991 – 63.8%

  • 1996 – 66.9%

  • 2001 – 59.1%

  • 2006 – 70.8%

  • 2011 – 78.2%

  • 2016 – 73.6%

  • 2021 – 76.6%

X

Daily Thanthi
www.dailythanthi.com