புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை? உத்தேச பட்டியல் வெளியீடு

புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை?  உத்தேச  பட்டியல் வெளியீடு
Published on

புதுவை,

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகள் இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில், பாஜக 10 தொகுதிகளில், அதிமுக 2 தொகுதிகளில் மற்றும் எல்.ஜே.கே. 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வரும் 23ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக இருப்பதால், போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளன.

பாஜக போட்டியிடும் தொகுதிகள்:

கதிர்காமம், இந்திரா நகர், அரியாங்குப்பம், தட்டாஞ்சாவடி, மங்களம், திருப்புவனை, வில்லியனூர், உழவர்கரை, நெட்டப்பாக்கம், ஏம்பலம், பாகூர், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, ஏனாம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் 16 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது.

பாஜக; 10 தொகுதிகள்:

ராஜ்பவன், மன்னாடிப்பட்டு, மணவெளி, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, திருநள்ளாறு, ஊசுது, திருப்பட்டினம், மாஹே

எல்.ஜேகே:

காமராஜ் நகர், நெல்லித்தோப்பு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com