பா.ஜனதா வேட்பாளர்கள் யார்? யார்? - இன்று முக்கிய ஆலோசனை

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜனதா வேட்பாளர்கள் யார்? யார்? - இன்று முக்கிய ஆலோசனை
Published on

சென்னை,

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 27 இடங்களில் போட்டியிடுகிறது. போட்டியிடும் தொகுதிகளின் விவரமும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, யார்? யார்? எந்தெந்த தொகுதிக்கு வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்பது தொடர்பாக பா.ஜனதா அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

சென்னையில் மயிலாப்பூர் தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை நெல்லை தொகுதியில் களம் கண்ட நயினார் நாகேந்திரன் சாத்தூர் அல்லது ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com