புதுவையில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் யார் யார்? விஜய் இன்று அறிவிப்பு

புதுவையில் 30 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது.
புதுவையில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் யார் யார்? விஜய் இன்று அறிவிப்பு
Published on

30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் விஜய்யின் தவெக போட்டியிடுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவிக்கிறார். வேட்பாளர் தேர்வு கடந்த 16 ஆம் தேதி நடைபெற்று இறுதி செய்யப்பட்டது. இன்று அறிவிக்கப்படும் தவெக வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான நாளை( 23-ம்) தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com