புதுவையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த இளைஞர்கள் - போலீசார் லேசான தடியடி

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இளைஞர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர்
புதுவையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த இளைஞர்கள் - போலீசார் லேசான தடியடி
Published on

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று புதுவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். புதுவையில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தட்டாஞ்சாவடியில் விஜய்யின் பிரசாரம் நடைபெற்றது.

இதற்காக இன்று காலை சென்னை பனையூரில் உள்ள வீட்டில் இருந்து சாலை மார்க்கமாக விஜய் புறப்பட்டார். விஜய்யை பார்க்க வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் காத்திருந்தனர். சிறிது தூரம் காரில் பயணித்த விஜய், பின்னர் தனது பிரசார வேனில் நின்று தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு பயணித்தார்.

சில இடங்களில் விஜய்யை பார்த்து ஆர்வமிகுதியால் தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்தனர். ஆபத்தான முறையில் பைக்கில் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்ததையும் காண முடிந்தது.அதேபோல், புதுச்சேரி கலாப்பட்டு முதல் தட்டாஞ்சாவடி வரை விஜய் ரோடு ஷோவாக வந்த போது, பிரசார வாகனத்தை இளைஞர்கள் சிலர் சூழ்ந்தனர். இதனால் விஜய் வாகனம் இன்ச் பை இன்ச் ஆக நகர்ந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இளைஞர்களை லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com