சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: புகழேந்தி அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து பிராசரம் செய்வேன் என்று புகழேந்தி கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: புகழேந்தி அறிவிப்பு
Published on

சென்னை,

அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக பெங்களூரு புகழேந்தி இருந்தார். அவர் சிறைக்கு சென்ற பிறகு டிடிவி அணிக்கு சென்றார். அமமுக-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி "புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். வரும் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை புகழேந்தி சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்வேன். எடப்பாடி தொகுதியில் அதிமுக தோற்கும். 2026 தேர்தலோடு அதிமுக, எடப்பாடி பழனிசாமி கதை முடிந்துவிடும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com