பப்ஜி, ஆன்லைன் ரம்மி செயலிகளையும் தடை செய்ய வேண்டும் - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பப்ஜி, ஆன்லைன் ரம்மி செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Published on

சென்னை,

இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாக கூறி, டிக்-டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம். இது போன்ற மேலும் பல செயலிகள் நமது நாட்டின் பொது சமூகத்திற்கும், வளரும் தலைமுறையின் நலன்களுக்கும் கேடு விளைவிக்கின்றன. ஆரோக்கியம் பேணும் வகையில் ஒடி, விளையாடி வளர வேண்டிய பிள்ளைகள் கழுத்து வலிக்க, கண் சிவக்க ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

அவர்கள் ஆரோக்கியத்தையும், சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து நோயாளிகளாக மாறுவது நமது சமூக அமைப்பிற்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். இது போன்ற செயலிகள் உளவியல் ஊனமுற்றவர்களாக நம் சமூகத்தை மாற்றிவிடும். எனவே, நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி பப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com