மாலை விற்பனை மும்முரம்


மாலை விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 15 Nov 2022 6:31 PM GMT (Updated: 16 Nov 2022 5:55 AM GMT)

நாளை கார்த்திகை மாதம் பிறப்பதால் மாலை விற்பனை சூடுபிடித்துள்ளது.

புதுச்சேரி

கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். அதாவது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து செல்வார்கள். அதன்படி நாளை (வியாழக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. அன்று காலை புதுவை பாரதிபுரம் அய்யப்பன் கோவில், மணக்குள விநாயகர் கோவில், சித்தானந்தா கோவில், அரியாங்குப்பம் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மாலை அணிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விரதமிருக்கும் பக்தர்கள் புதுவை பெரிய மார்க்கெட்டில் துளசி, ருத்ராட்சம் ஆகிய மாலைகளை வாங்கி சென்றனர். மேலும் இருமுடிகட்ட தேவையான பொருட்களை வாங்கினர். இதனால் மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. துளசி மாலை ரூ.50 முதல் ரூ.85 வரையும், ருத்ராட்சம் மாலை ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story