ரூ.32 கோடியில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள்


ரூ.32 கோடியில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள்
x

புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.32 கோடி செலவில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள் அமைய உள்ளது.

புதுச்சேரி

புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.32 கோடி செலவில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள் அமைய உள்ளது.

உள்சாலைகள்

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.3.57 கோடி செலவில் உள்சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியும், தலா ரூ.67 லட்சம் செலவில் மாணவ, மாணவிகள் விடுதி புனரமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கல்லூரி இயக்குனர் உதயசங்கர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

11 அறுவை சிகிச்சை கூடங்கள்

இப்பணிகளை தொடர்ந்து மருத்துவமனை கட்டிடத்தின் 4-வது மாடியில் அதிநவீன வசதிகள் கொண்ட 11 அறுவை சிகிச்சை கூடங்கள் ரூ.32 கோடி செலவில் கட்டப்பட உள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் உள்ளிருப்பு மருத்துவர்கள் தங்குவதற்காக ரூ.32 கோடி மதிப்பீட்டில் 240 அறைகளுடன் 8 மாடி விடுதி கட்டுமான பணிகளும் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. மருத்துவமனை, கல்லூரி, நூலகம் மற்றும் அதைசார்ந்த அனைத்து கட்டிடங்களையும் புனரமைக்க ரூ.6.50 கோடி செலவில் பல்வேறு பணிகள் மிகவிரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.


Next Story