1,200 மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை


1,200 மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை
x

புதுச்சேரி கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.


Next Story