பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

திருபுவனை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
Published on

புதுச்சேரி

திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணம் வைத்து சூதாடுவதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.

அதில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 32), பிரபகாரன் (51), அங்கப்பன் (40), சிவக்குமார் (47), முருகன் (46), தீனதயாளன் (32), ஜெகதீசன் (40), சிலம்பரசன் (30) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரம் ரொக்கம் மற்றும் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் கோர்ட்டில் ஆஜார்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com