மின்விளக்குகளை கையில் ஏந்தி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம்


மின்விளக்குகளை கையில் ஏந்தி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம்
x

புதுவையில் இந்தியா, பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் மின்விளக்குகளை கையில் ஏந்தி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம் நடத்தினர்.

புதுச்சேரி

இந்தியா, பிரான்ஸ் தேசிய கொடிகளுடன் மின்விளக்குகளை கையில் ஏந்தி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம் நடத்தினர்.

பிரான்ஸ் தேசிய தினம்

பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர். இதனை நினைவு கூறும் விதமாக பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ந் தேதி மின் விளக்குகளை கையில் ஏந்தி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

ஊர்வலம்

புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை வண்ண விளக்குகளை கையில் ஏந்திய படி பிரெஞ்சு மக்கள் ஊர்வலமாக சென்றனர். கடற்கரை சாலையில் டூப்ளே சிலை அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை புதுச்சேரி-பிரெஞ்சு துணைத்தூதர் லிசே டல்போட் பரே தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், பிரெஞ்சு பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கடற்கரை சாலை வழியாக சென்று பிரெஞ்சு தூதரகத்தில் முடிவடைந்தது.


Next Story