ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா


ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா
x

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 261 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

பாகூர்

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 261 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழா

கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 2022-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கோரிமேடு சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்கினார். ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் ராஜன் வரவேற்றார். முதல்வர் கோட்டூர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரவிக் குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.

சிறந்த மாணவர்களுக்கு பதக்கம்

விழாவில் முதுநிலை பட்டம் முடித்த 13 பேர், இளநிலை மருத்துவ மாணவர்கள் 248 பேர் என மொத்தம் 261 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாக இயக்குனர் அனுராதா கணேசன் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயசிங் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழாவில் டாக்டர்கள் லட்சுமி ஜாட்டியா, மஞ்சு, மேகநாதன், ஜவகர், வரதராஜ பெருமாள், லதா, மிஸ்ரா, அதுல், வித்யாவதி, தீபா, சந்துரு பாஸ்கர், தினேஷ் மற்றும் இணை பதிவாளர் பெருமாள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ உதவி கண் காணிப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


Next Story