

பாகூர்
புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மூலமாக வழங்கப்பட்ட இலவச மனைகள் டிரோன் மூலமாக அளவீடு செய்யப்பட்டு, சொத்து மதிப்பீட்டு அடையாள அட்டை தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகூர் தொகுதியில் இலவச மனைப்பட்டா பெற்ற பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பாகூரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதற்கட்டமாக 210 பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பாகூர் தொகுதி தி.மு.க. பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.