வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்


வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
x

தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்

பாகூர்

பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி நூதன முறையில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சித்தேரி - குருவிநத்தம் சாலையில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தலைமையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் சென்றார். உடனே போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதை பார்த்த டிரைவர், சாலையோரம் வேனை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பிச்சென்று விட்டார்.

இதையடுத்து வேனை திறந்து சோதனை செய்தபோது, மணல் மூட்டைகள் இருந்தன. இதுபற்றி விசாரணை நடத்தியபோது தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த 35-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்து பாகூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மணல் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story
  • chat