மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம்


மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் குழப்பம்
x

மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பட்டியலை சென்டாக் திரும்ப பெற்றதால் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி

மருத்துவ படிப்பில் 2-ம் கட்ட கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த பட்டியலை சென்டாக் திரும்ப பெற்றதால் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் வருகிற 11-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

இந்த கலந்தாய்வில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொள்ளலாம். இதில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மட்டும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவு கட்டணமாக ரூ.2 லட்சம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

முதல்சுற்று கலந்தாய்வில் ஏற்கனவே பதிவு கட்டணம் செலுத்தி இருந்தால் 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு மீண்டும் பதிவு கட்டணம் செலுத்த அவசியமில்லை. 2-ம் சுற்று கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்களின் முன்பதிவு கட்டணம் மீண்டும் திரும்ப வழங்கப்படும். இந்த தகவலை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

2-ம் கட்ட கலந்தாய்வு ரத்து

இதற்கிடையே மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு நடத்தி அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் நீட் மதிப்பெண்அடிப்படையில் இடம் பிடித்தவர்களின் பெயர் விவரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டது.

அந்த பட்டியலில் குழப்பங்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த கலந்தாய்வு பட்டியல் திரும்பப்பெறப்படுவதாக (ரத்து) சென்டாக் தெரிவித்துள்ளது. புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் சென்டாக் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Next Story