மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி


மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
x

புதுவையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.

அரியாங்குப்பம்

புதுவை அபிஷேகப்பாக்கம் ஏரிக்கரையிலிருந்து ஆரம்பமாகும் மழைநீர் வடிகால் வாய்க்காலானது திருமலைவாசன் நகர், ராஜாராம் நகர், தவளக்குப்பம் தாமரைக்குளம், தானம்பாளையம் வழியாக பூரணாங்குப்பம் ஆற்றங்கரை செல்கிறது. இந்த வாய்க்கால் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது.

இந்த பணிகளை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார். தொடர்ந்து பூரணாங்குப்பம் ஆற்றுவாய்க்காலையும் தூர்வாரி சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் சரஸ்வதி, அகிலன், பா.ஜ.க. விவசாய அணி பொறுப்பாளர் ராமு, முன்னாள் கவுன்சிலர் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story