போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்


போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
x

புதுவையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

புதுச்சேரி

புதுவையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாரத்தான் ஓட்டம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ந்தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புதுவையில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் ஓட்டம் 10 முதல் 17 வயது மாணவர்களுக்கு 5 கி.மீட்டர் தூரம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி. மீட்டர் தூரம் என இரு பிரிவுகளாக நடந் தது. கடற்கரை சாலையில் தொடங்கிய இந்த ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கடற்கரை சாலையில் முடிவடைந்தது.

பரிசளிப்பு

தொடர்ந்து இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் ஓட்டத்தில் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story