பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
x

பாகூர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாகூர்

பாகூர் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேலாளர் ரவி மேற்பார்வையில் ஊழியர்கள் இன்று மார்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த ஊழியர்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், அதனை முறைப்படுத்தி கொள்ளவில்லை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story