தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16½ லட்சம் மோசடி


தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16½ லட்சம் மோசடி
x

புதுச்சோியில் தனியாா் நிறுவன ஊழியாிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி

கரையாம்புத்தூரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது39). தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் குறுஞ்செய்தி அனுப்பியவர் கரீனா என அறிமுகம் செய்தார். அவர் ஒரு பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் பகுதிநேர வேலை இருப்பதாகவும் கூறினார். இதற்காக பல்வேறு தவணைகளாக வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.16 லட்சத்து 52 ஆயிரத்து 997 அனுப்பினார். ஆனால் கரீனா கூறியபடி வேலையும் கொடுக்கவில்லை. சுந்தரபாண்யடின் அனுப்பிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தரபாண்டியன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story