பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து


பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து
x

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி, மத்திய அரசின் உதவியுடன் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

பிரதமரின் இந்த அறிவிப்பு தமிழின் சிறப்பை உலகத்திற்கு எடுத்துக்கூறவும், தமிழ் ஆராய்ச்சியை வலுப்படுத்தவும் உதவும். அதற்காக, நம் பிரதமருக்கு தமிழர்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story