ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் கைது


ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் கைது
x

நெட்டப்பாக்கம் அருகே ஏ.டி.எம். மையத்தை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம் அருகே ஏ.டி.எம். மையத்தை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம். மையம்

நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு இன்று பொதுமக்கள் பணம் எடுக்க சென்றனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை கல்லால் தாக்கி சேதப்படுத்தினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், வங்கி மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஏ.டி.எம். மைய பொறுப்பாளர் சுகுமார் அங்கு விரைந்து வந்து, கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய நபரை தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர், சுகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கொள்ளை முயற்சியா?

இதற்கிடையில் அங்கு வந்த நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் மர்மநபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது43) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பணம் கொள்ளையடிக்கும் நோக்கில் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவை சிவபாலன் சேதப்படுத்தினாரா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story