தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கண்காட்சி


தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு கண்காட்சி
x

காரைக்கால் அம்பகரத்தூரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடந்தது

கோட்டுச்சேரி

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் காலனிபேட் அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடந்தது. அங்கன்வாடி பணியாளர் கலையரசி வரவேற்றார். அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் மலர்விழி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சிறுதானிய உணவு மற்றும் காய்கறி, பழம், கீரை வகைகளை காட்சிப்படுத்தினர்.


Next Story