முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை


முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை
x

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேர்த்திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியாங்குப்பம்

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி தேர்த்திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆடி தேர் திருவிழா

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி தேர்த்திருவிழா ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நடக்கிறது.கொடியேற்ற நிகழ்ச்சி வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

விழாவில் புதுவை, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், மின்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் கோபி மற்றும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் திருவிழாவை சிறப்பாக நடத்துவது, தற்காலிக பஸ் நிறுத்தம், குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்தல், போலீஸ் பூத் அமைத்தல், ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலைய வாகனங்களை தயாராக நிறுத்தி வைப்பது குறித்து கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.


Next Story