தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x

புதுவையில் மனவேதனையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரி கரசூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 69). தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனவே சுந்தரம் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுந்தரம் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story