வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணை


வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணை
x

புதுவையில் வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் (வேளாண் பொறியியல்) விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடியே 24 லட்சம் பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன் பெறும் 10 விவசாயிகளுக்கு ஏற்கனவே வேளாண் உபகரணங்கள் வாங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 10 பேருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணைகளை வழங்கினார். அப்போது வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story