யானை இறந்த இடத்தில் சிலை வைத்து வழிபட்ட பொதுமக்கள்


யானை இறந்த இடத்தில் சிலை வைத்து வழிபட்ட பொதுமக்கள்
x

யானை இறந்த இடத்தில் சிலை வைத்து வழிபட்ட பொதுமக்கள், இதனை போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபயற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இரவு அங்கு திடீரென 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

இது பற்றிய தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அனுமதியின்றி இங்கு சிலை வைக்கக்கூடாது. அதனை அகற்றுமாறு உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story