போலீசார்- வியாபாரிகள் நல்லுறவு கூட்டம்


போலீசார்- வியாபாரிகள் நல்லுறவு கூட்டம்
x

உருளையன்பேட்டையில் போலீசார்- வியாபாரிகள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி

உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசார்- வியாபாரிகள் நல்லுறவு கூட்டம் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் மதுபானம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story