போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு


போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு
x

வீராம்பட்டினம் கோவில் திருவிழாவில் போலீஸ்காரர் மனைவியிடம் மர்ம நபர்கள் நகை பறித்தனர்.

அரியாங்குப்பம்

காட்டேரிக்குப்பம் அம்மன் நகரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 55). இவர் புதுச்சேரி காவல்துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி லோகநாயகி (53). இவர் கடந்த மாதம் வீராம்பட்டினத்தில் நடந்த தேர் திருவிழாவிற்கு வந்தார். அங்கு அன்னதானம் வாங்கி விட்டு திரும்பி பார்த்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்டத்தின்போது மர்மநபர்கள் யாரோ தங்கநகையை பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து லோகநாயகி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story