புதுச்சேரி சிறுவன் தங்கம் வென்று அசத்தல்

ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி சிறுவன் தங்க பதக்கம் வென்று அசத்தினான்.
புதுச்சேரி சிறுவன் தங்கம் வென்று அசத்தல்
Published on

புதுச்சேரி

ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி சிறுவன் தங்க பதக்கம் வென்று அசத்தினான்.

3-ம் வகுப்பு மாணவன்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்- மணிமேகலை தம்பதியின் மகன் ராகுல் ராமகிருஷ்ணன் (வயது 7). பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான்.

அண்மையில் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்த ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் ராகுல் கலந்துகொண்டு விளையாடினான்.

தங்க பதக்கம்

பிளிட்ஸ் பிரிவில் பங்கேற்ற ராகுல் 7 சுற்றுகளில் 6 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினான். மேலும் ரேபிட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றான்.

இந்த ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற எம்.பி.எல். 34-வது 8 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ஓபன் செஸ் போட்டி மற்றும் புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே 2-வது இடத்தை ராகுல் பிடித்தார்.

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் செஸ் போட்டியில் இந்தியா சார்பில் ராகுல் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com